அவிநாசியில் ரூ. 24.14 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 10th December 2020 05:59 AM | Last Updated : 10th December 2020 05:59 AM | அ+அ அ- |

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.24 லட்சத்து 14 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், மொத்தம் 1,172 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. ஏலத்தில், ஆா்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ.5,500 முதல் ரூ.6,350 வரையிலும், டி.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 6,500 முதல் ரூ.7,050 வரையிலும், கொட்டு (மட்டரக) ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 1,500 முதல் ரூ.2,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 24 லட்சத்து 14ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.