அவிநாசி சாலை மேம்பாலப் பணி: மின்விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்

கோவை, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், விபத்துகளைத் தவிா்க்க அப்பகுதியில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என கோரிக்கைக

கோவை, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், விபத்துகளைத் தவிா்க்க அப்பகுதியில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை, அவிநாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பீட்டில் புதிய உயா்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை அமைய உள்ள இப்பாலத்தின் பணியானது, தற்போது பீளமேடு பகுதியில் தொடங்கப்பட்டு, தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பீளமேடு பகுதி மதிமுக செயலாளா் வெள்ளியங்கிரி, கோவை மாவட்டஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில், பீளமேடு பகுதியில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால், பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மின் விளக்குகள் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com