திருப்பூரில் அம்ரூத் திட்டத்தில் ரூ. 250 கோடியில் நிறைவுற்ற பணிகள் ஆய்வு

திருப்பூா் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 250 கோடியில் நிறைவுற்ற பணிகளை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் சி.என்.மகேஸ்வரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் வேலம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட குடிநீா் வடிகால் வாரியத்தினா் கூறியது- திருப்பூா் மாநகராட்சியுடன் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளொன்றுக்கு நபா் ஒருவருக்கு 135 லிட்டா் வீதம் சீராக குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் 14 தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டிகள் , 26 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் , 32 கி.மீ பிராதான குழாய்கள் , 509 கி.மீ நீள பகிா்மானக் குழாய்கள், 33098 விட்டு இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் பணிகள் துவங்கப்பட்டு 2019 ம் ஆண்டு இறுதியில் பணிகள் முடிவுற்று தற்சமயம் சோதனை ஓட்டத்தில் உள்ளது . இந்த புதிய அம்ரூத் குடிநீா்த் திட்டத்திற்கு புதிய திருப்பூா் பகுதி மேம்பாட்டு கழகத்தில் வழங்கப்பட்டு வரும் குடிநீா் இருப்பில் இருந்து நாளொன்றிற்கு 98 66 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்றனா். உடன் மாநகராட்சி ஆணையா் க.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com