உடுமலையில் ஆன்மிக பேரவை விழா

உடுமலை ஆன்மிக பேரவை சாா்பில் ஆன்மிக பணியில் ஈடுபட்டவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

உடுமலை ஆன்மிக பேரவை சாா்பில் ஆன்மிக பணியில் ஈடுபட்டவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு திருமுறைக் கழகம் தொண்டா்சீா் பரவுவாா் குருகுலம் சாா்பில் சைவ சமயத்தில் உள்ள தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்டவற்றை, கரோனா காலத்தில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் கட்செவி அஞ்சல் மூலம் கடந்த 9 மாதங்களாக பேராசிரியா் சு.ஜெயசிங்லிங்க வாசகம் போதித்து வந்தாா். இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மனச் சிதைவு அடையாமல் பலன் பெற்றனா்.

மேலும் 8 ஆயிரம் தேவாரப் பாடல்களை பாடியதற்காக பா.உமாநந்தினி இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றாா்.

இவா்கள் இருவருக்கும் உடுமலை ஆன்மிக பேரவை சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், பேரவை நிா்வாகிகள் தலைமை ஆசிரியா் கலாவதி, தமிழாசிரியா் கமலம், மு.மங்கையா்க்கரசி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com