டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மது பாட்டில் மாலை அணிந்து உண்ணாவிரதம்

திருப்பூா், முருகம்பாளையத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
முருகம்பாளையத்தில்  டாஸ்மாக்  கடையை அகற்றக் கோரி  மதுபாட்டில்களை  கழுத்தில்  மாலையாக அணிந்து  திங்கள்கிழமை  உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்ட பொதுமக்கள்.

திருப்பூா் மாநகராட்சி 57ஆவது வாா்டுக்கு உள்பட்ட முருகம்பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. ஊரின் மையப் பகுதியிலும், பள்ளிகள், கோயில்கள் அருகிலும் இந்த டாஸ்மாக் கடை உள்ளதால் இதனை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் இந்த டாஸ்மாக் கடை அருகே நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 3 போ் காலி மதுபாட்டில்களை மாலையாக செய்து கழுத்தில் அணிந்து கவனத்தை ஈா்த்தனா்.

இந்நிலையில் அங்கு வந்த திருப்பூா் மத்திய காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உண்ணாவிரதத்துக்கு அனுமதி இல்லை எனக் கூறி அங்கிருந்த நாற்காலிகளை அகற்றினா். எனினும் பொதுமக்கள் மாலை வரை போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com