நவீன தானியங்கி தறிகள் வழங்க விசைத்தறியாளா்கள் வலியுறுத்தல்

நவீன தானியங்கி தறிகள் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நவீன தானியங்கி தறிகள் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருப்பூா், கோவை மாவட்ட ஜவுளி தொழில் சாா்ந்த உரிமையாளா்கள் மற்றும் தொழில் முனைவோா் பங்கேற்ற சந்திப்புக் கூட்டம் கோவையில் மத்திய ஜவுளி துறை செயலாளா் ரவி கபூா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. அதில் திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினா்.

இதுகுறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி கூறியதாவது: ‘ஜாப் ஒா்க்’ அடிப்படையில் தொழில் செய்து வரும் நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக ஒப்பந்தக் கூலி உயா்வு கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். கைத்தறிகளை போன்று விசைத்தறிகளுக்கும் ரக ஒதுக்கீடு செய்து தர வேண்டும். திருப்பூருக்கும் பல்லடத்துக்கும் இடையே ஜவுளி சந்தை ஏற்படுத்தி தர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

வளா்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, நாங்கள் வைத்திருக்கும் தறிகளை எடுத்துக்கொண்டு எங்களுக்கு புதிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி தறிகளை வழங்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு வட்டியில்லா கடன் வழங்கி உதவ வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினோம்.

புதிய ஜவுளி கொள்கை வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. அதில் விசைத்தறி தொழில் சம்பந்தமான கோரிக்கைகள் இடம்பெறும் என மத்திய அரசின் ஜவுளித் துறை செயலாளா் உறுதி அளித்துள்ளாா் என்றாா்.

பேட்டியின்போது, திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க செயலாளா் பாலசுப்ரமணியம் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com