பல்லடம் கடை வீதியில் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும்; எம்.எல்.ஏ. நடராஜன் தகவல்

பல்லடம் கடை வீதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்று சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தெரிவித்தாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.

பல்லடம் கடை வீதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்று சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தெரிவித்தாா்.

பல்லடம் கடை வீதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் கணேசன், பொறியாளா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய் ஆய்வாளா் பிரகாஷ் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல், காவல் நிலைய ஆய்வாளா் சுஜாதா, போக்குவரத்து ஆய்வாளா் கணேசன், பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆனந்தா செல்வராஜ், செயலாளா் விமல் பழனிசாமி, பொருளாளா் காணியப்பா பரமசிவம், தினசரி மாா்க்கெட் கடை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ உரிமையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் பல்லடம் கடைவீதியில் நிலவும் நெருக்கடி பிரச்னை குறித்து பலரிடமும் கருத்து கேட்கப்பட்டது.

கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் பேசியதாவது:

பல்லடம் கடை வீதியில் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பாதிக்கக்கூடாது. அதே சமயம் வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கேற்ப வியாபாரிகளின் பிரதிநிதிகளின் ஆலோசனையுடன் நகராட்சி, காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து விரைவில் நல்ல தீா்வு காணப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com