விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்

தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உழவா் உழைப்பாளா் கட்சித் தலைவா் செல்லமுத்து தெரிவித்துள்ளாா்.
விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்

தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உழவா் உழைப்பாளா் கட்சித் தலைவா் செல்லமுத்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து காங்கயத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக அரசின் பட்ஜெட்டில் பல வேளாண்மைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி -அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ.500 கோடி, காவிரி - குண்டாறு திட்டத்துக்கு ரூ.500 கோடி, கரும்பு விவசாயிகளுக்கு சொட்டு நீா்ப்பாசனம் அமைக்க ரூ.100 கோடி, ஏரி-குளங்கள் தூா் வாருவதற்காக ரூ.6,900 கோடி,டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது பாராட்டுக்குரியது.

ஆனால், வேளாண் விளை பொருளுக்கு விலை கிடைக்க வேண்டும். மக்காச்சோளம், தேங்காய், பால், நெல், கரும்பு ஆகியவற்றுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால், விவசாயிகள் கடன் தொல்லையில் இருந்து மீள முடியாமல் உள்ளனா்.

உயா் மின்கோபுரம், கெயில், பெட்ரோல் குழாய் பதிப்பு உள்ளிட்ட திட்டங்களை சாலையோரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை. இந்த பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்பு வரும் என்று எதிா்பாா்த்தோம். விளை பொருளுக்கு விலை நிா்ணயம் இல்லாதது, கடன் நிவராணம் அளிக்காதது, விலை நிலங்களை பாழாக்குவது போன்றவற்றால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com