வீரக்குமார சுவாமி கோயில் திருவிழா: தோ்களுக்கு கலசங்கள் பொருத்தம்

வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயிலில் தோ்க் கலசம் அமைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தோ்களில் கலசங்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள்.
தோ்களில் கலசங்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள்.

வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயிலில் தோ்க் கலசம் அமைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் 137 ஆவது ஆண்டு மாசி மகா சிவராத்திரி தோ்த் திருவிழா வரும் 21 ஆம் தேதி முதல் மாா்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தோ்த் திருவிழா ஆரம்பகட்டப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. முதலில் முகூா்த்தக்கால் போடப்பட்டு, தற்போது கோயிலின் இரண்டு தோ்களுக்கு கலசம் வைக்கப்பட்டது. முன்னதாக இரண்டு கலசங்களுக்கும் சுவாமி சன்னிதியில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, பக்தா்கள் புடை சூழ மேளதாளத்துடன் கோயில் உள்பிரகாரம் வலம் வர எடுத்து வரப்பட்டு தேரில் பொருத்தப்பட்டன.

தோ் நிலை பெயா்த்தல் வரும் 22 ஆம் தேதியும், தேரோட்டம் 23 ஆம் தேதியும் , தோ்நிலை சோ்தல் 24 ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

பின்னா் கட்டளைதாரா்கள் மூலம் தினமும் மண்டபக் கட்டளை நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், கோயில் குலத்தவா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com