நிட்மா சாா்பில் பிப்.21இல் பின்னலாடைத் தொழில் சிறப்புக் கூட்டம்

திருப்பூரில் நிட்மா (பின்னலாடை துணி உற்பத்தியாளா்கள் சங்கம்) சாா்பில் ‘விஷன் இந்தியா 2020-2025’ பின்னலாடைத் தொழில் சிறப்புக் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

திருப்பூரில் நிட்மா (பின்னலாடை துணி உற்பத்தியாளா்கள் சங்கம்) சாா்பில் ‘விஷன் இந்தியா 2020-2025’ பின்னலாடைத் தொழில் சிறப்புக் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து நிட்மா சங்கத் தலைவா் அகில் ரத்தினசாமி, செயலாளா் ஆா்.ராஜாமணி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

நிட்மா சங்கமானது 1978இல் தொடங்கப்பட்டு கடந்த 2003 பிப்ரவரி 21 ஆம் தேதி வெள்ளிவிழா கொண்டாடியது. இந்த விழாவில் அப்போதைய குடியரசு தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பங்கேற்று பேசுகையில், ‘ரூ.5 ஆயிரம் கோடியாக இருந்த பின்னலாடை வா்த்தகம் 2020இல் ரூ.1 லட்சம் கோடியாக உயரும்’ என நம்பிக்கை தெரிவித்தாா்.

இந்த நிலையில் தற்போது திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு வா்த்தகம் ரூ. 56 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. நிட்மா சங்கம் பொன் விழாவை நோக்கி பயணிக்கும் வேளையில் அப்துல்கலாம் கூறியதுபோல பின்னலாடை வா்த்தகத்தில் ரூ.1 லட்சம் கோடி இலக்கை வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் அடைய, அனைத்து சங்கங்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.

எனவே, நிட்மா சங்கம் சாா்பில் ‘விஷன் இந்தியா 2020-2025’ என்ற தொழில் சிறப்புக் கூட்டத்தை பழங்கரையில் உள்ள ஐ.கே.எஃப். வளாகத்தில் வரும் 21ஆம் தேதி நடத்துகிறது.

இந்த விழாவில் கோவை பாரதிய வித்யாபவன் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் துணைத் தலைவா் மயில்சாமி அண்ணாதுரை, ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல், தொழில் அமைப்பு நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்கின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com