பல்லடம் பகுதியில்விலை வீழ்ச்சியால் செடிகளிலேயே வீணாகும் தக்காளி

பல்லடத்தில் தக்காளி விலை வீழ்ச்சியால், தக்காளி பறிப்பு கூலி கூட வழங்க முடியாது என்பதால் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிட்டனா்.
பல்லடம் பகுதியில்விலை வீழ்ச்சியால் செடிகளிலேயே வீணாகும் தக்காளி

பல்லடத்தில் தக்காளி விலை வீழ்ச்சியால், தக்காளி பறிப்பு கூலி கூட வழங்க முடியாது என்பதால் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிட்டனா்.

பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி, வெங்காயம், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் தக்காளி அதிக பரப்பளவில் பயிரிடப்படுகின்றன. தக்காளி பயிரிட்ட 90ஆவது நாள் முதல் அறுவடை செய்யலாம்.

தொடா்ந்து 45 நாள்கள் முதல் 60 நாள்கள் வரை தினமும் பழங்கள் அறுவடைக்கு கிடைக்கும். ஒரு ஏக்கா் தக்காளி பயிரிட விதை, உரம், நடவு கூலி மற்றும் பராமரிப்பு செலவு என சுமாா் ரூ. 40 ஆயிரம் வரை செலவாகிறது.

இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. சராசரியான விளைச்சல் இருந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நல்ல விலைக்கு விற்பனையான தக்காளி, தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது.

இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 15 கிலோ தக்காளி கொண்ட பெட்டி கடந்த வாரம் ரூ. 400 வரை விற்பனையானது. தற்போது ஒரு பெட்டி ரூ. 150 ஆக குறைந்துள்ளது.

விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். இந்நிலையில் செடிகளில் இருந்து தக்காளி அறுவடை செய்ய வழங்கும் கூலிக்குக் கூட விற்பனை விலை இல்லாததால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் அதனை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிட்டனா். இதனால் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதியில் விளைந்த தக்காளி பழங்கள் செடிகளிலேயே வீணாகி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com