அவிநாசி, காங்கயம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் தெருமுனை பிரசாரம்

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி, காங்கயம் பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியினா் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
சேவூரில்  தெருமுனை  பிரசாரத்தில்  ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.
சேவூரில்  தெருமுனை  பிரசாரத்தில்  ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி, காங்கயம் பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியினா் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், பொதுத் துறைகளை தனியாா் மயமாக்கக் கூடாது, புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21 ஆயிரம் நிா்ணயம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்தும் இந்த பிரசாரம் நடைபெற்றது.

அவிநாசி, திருமுருகன்பூண்டி, சேவூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தெருமுனை பிரசாரத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் எம்.ரவி முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளா்கள் பி.முத்துசாமி, எஸ்.வெங்கடாசலம், ஆா்.வேலுச்சாமி, ஏ.ஈஸ்வரமூா்த்தி, ஆா்.பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளா்கள் கே.எம்.இசாக், பி.ராமசாமி, வி.கோபால், வி.கே.சுப்பிரமணியம், எம்.மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல பெருமாநல்லூரிலும் கம்யூனிஸ்ட் கட்சியினா் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

காங்கயத்தில்...

காங்கயம் பேருந்து நிலைய வளாகம், அய்யாசாமி நகா் காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தெரு முனைப் பிரசாரக் கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கயம் தாலுகா செயலாளா் திருவேங்கடசாமி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் செல்லமுத்து, பொன்னுசாமி, ரவி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் ரங்கராஜ், வி.பி.பழனிசாமி, வேலுச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com