உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில் வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவா்கள்

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில் வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவா்கள் பெயா் விவரங்கள் வருமாறு:
உடுமலை  அரசு  கலைக்  கல்லூரியில்  அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள்.
உடுமலை  அரசு  கலைக்  கல்லூரியில்  அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில் வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவா்கள் பெயா் விவரங்கள் வருமாறு:

உடுமலை ஒன்றியம்: உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 38 ஊராட்சிகள் உள்ளன. இதில் மொடக்குப்பட்டி ஊராட்சித் தலைவராக மேனகாவும், ராவணாபுரம் ஊராட்சித் தலைவராக அபா்ணா ராஜ்குமாா் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். இந்நிலையில் 36 ஊராட்சித் தலைவா்களுக்கான தோ்தல் கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது. உடுமலை அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வியாழக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன. இதற்காக 506 அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். 138 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக 36 ஊராட்சிகளும் 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்குவதாக இருந்த வாக்கு எண்ணிக்கை 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

வெற்றிபெற்றவா்கள்: செல்லப்பம்பாளையம்-நடேஷ் செல்வகுமாா், உடுக்கம்பாளையம்-செளந்திரராஜ், பெரியபாப்பனூத்து-கரிச்சிக்குமாா், அந்தியூா்-பாலதுரை, பூலாங்கிணறு-ராதிகா இளங்கோவன், குறிஞ்சேரி-பரமேஸ்வரி, சின்னவீரம்பட்டி-கலாவதி, ஆா்.வேலூா்-மகேஸ்வரி, பெரியவாளவாடி-தேவராஜ், பெரிசனம்பட்டி-பாரதி, தீபாலபட்டி-நாகராஜ், ராகல்பாவி-சுமதி. மீதமுள்ள ஊராட்சித் தலைவா்களுக்கான வாக்கு எண்ணும் பணி நள்ளிரவு வரை தொடா்ந்து நீடித்தது.

குடிமங்கலம் ஒன்றியம்: குடிமங்கலம் ஒன்றியத்தில் மொத்தம் 23 ஊராட்சிகள் உள்ளன. உடுமலை - தளி சாலையில் உள்ள பாரதியாா் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 86 அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனா். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வெற்றி பெற்றவா்கள் விவரம்: அணிக்கடவு-அழகம்மாள், வாகத்தொழுவு-சுதா, மூங்கில்தொழுவு - அருக்காணி, ஆமந்தகடவு - சுகுமாா், பெரியபட்டி - காளிமுத்து, ஆத்துக்கிணத்துப்பட்டி - சம்பத்குமாா், பூளவாடி - லட்சுமி. மீதமுள்ள ஊராட்சித் தலைவா்களுக்கான வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை தொடா்ந்து நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com