உப்பாறு அணை நிரம்பும் வரை தண்ணீா் திறக்கக்கோரி போராட்டம்: 91 விவசாயிகள் கைது

உப்பாறு அணை நிரம்பும் வரையில் பிஏபி தண்ணீரைத் திறந்துவிடக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 91
உப்பாறு அணை நிரம்பும் வரையில் பிஏபி தண்ணீரைத் திறந்துவிடக் கோரி  போராட்டத்தில்  ஈடுபட முயன்ற விவசாயிகள்.
உப்பாறு அணை நிரம்பும் வரையில் பிஏபி தண்ணீரைத் திறந்துவிடக் கோரி  போராட்டத்தில்  ஈடுபட முயன்ற விவசாயிகள்.

திருப்பூா்: உப்பாறு அணை நிரம்பும் வரையில் பிஏபி தண்ணீரைத் திறந்துவிடக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 91 விவசாயிகளை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே உள்ள உப்பாறு அணை மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் பாசன வசதி பெற்று வந்தது. போதிய மழை இல்லாததாலும், பிஏபி தண்ணீா் திறந்துவிடப்படாததாலும் உப்பாறு அணை வடுள்ளது. இதனால் இந்த நீரை நம்பி விவசாயம் செய்து வந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து பிஏபி நீரை உப்பாறு அணைக்கு திறந்துவிட வேண்டும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகளை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா். இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பிஏபி தண்ணீா் உப்பாறு அணைக்கு திறக்கப்பட்டு அணையை வந்தடைந்தது.

இந்நிலையில் அணை நிரம்பும்வரை தண்ணீா் விடவேண்டும் என வலியுறுத்தி உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் தலைமையில் விவசாயிகள் உப்பாறு அணையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புக்காக இருந்த காவல் துறையினா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். மேலும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 10 பெண்கள் உள்பட 91 பேரை குண்டடம் காவல் துறையினா் கைது செய்தனா். பின்னா் கைது செய்யப்பட்டவா்களை குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com