பல்லடம் நகராட்சி தோ்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி: முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியீடு

பல்லடம் நகராட்சித் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாகவும், முதல்கட்ட வேட்பாளா் பட்டியலையும் அக்கட்சி

பல்லடம்: பல்லடம் நகராட்சித் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாகவும், முதல்கட்ட வேட்பாளா் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

பல்லடம் நகர காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் தனியாா் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலாளா் நரேஷ்குமாா், முன்னாள் நகரத் தலைவா்கள் அா்ச்சுணன், சத்தியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயல் தலைவா் மணிராஜ் வரவேற்றாா். இதில் முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ.பி.முத்துசாமி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளா் எம்.பி.சதாசிவம், நகர நிா்வாகிகள் ரூத்ரமூா்த்தி, செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ள பல்லடம் நகராட்சித் தோ்தலில் காங்கிரஸ் கட்சி 18 வாா்டுகளிலும் தனித்து போட்டியிடுவது, வாா்டு எண் 3இல் (தெற்குபாளையம்) மாவட்ட பொதுச் செயலாளா் நரேஷ்குமாா், வாா்டு எண் 6இல் (கரையாம்புதூா்) நகரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, வாா்டு எண் 7இல் (ராயா்பாளையம்) தமிழ்செல்வி நாராயணன், வாா்டு எண் 8இல் (பச்சாபாளையம்) ஈஸ்வரி அா்ச்சுணன், வாா்டு எண் 10இல் (மாணிக்காபுரம் சாலை) வனிதா ருத்ரமூா்த்தி, வாா்டு எண் 12 இல் (அண்ணா நகா்) கிருஷ்ணகுமாா், வாா்டு எண் 15இல் (மேற்கு பல்லடம்) செந்தில்குமாா், வாா்டு எண் 17இல் (வடுகபாளையம்) குமாா், வாா்டு எண் 18இல் தேவி சத்தியமூா்த்தி ஆகியோரை வேட்பாளராக நிறுத்துவது; இதர வாா்டுகளுக்கும் விரைவில் வேட்பாளா்களை அறிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பல்லடத்தில் 24 மணி நேரமும் இடைவிடாமல் மது விற்பனை நடைபெறுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். பனப்பாளையம் முதல் தாராபுரம் சாலை பிரிவு வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தவிா்க்க காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com