பல்லடம் கடை வீதியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தல்

பல்லடம் கடைவீதியில் தள்ளுவண்டிகளில் விவசாயப் பொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என தள்ளுவண்டி வியாபாரிகள் நகராட்சி ஆணையா் கணேசனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பல்லடம் நகராட்சி ஆணையா் கணேசனிடம் திங்கள்கிழமை மனு அளித்த வன்னியா் சங்கத்தினா், தள்ளுவண்டி வியாபாரிகள்.

வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா்கள் சுரேஷ், புருஷேத்தமன் ஆகியோா் தலைமையில் பல்லடம் கடை வீதி தள்ளுவண்டி வியாபாரிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் கடை வீதியில் தினசரி சந்தைக்கு முன்பாக தள்ளுவண்டிகளில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட விவசாய விளைபொருள்களை கடந்த பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறோம். எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தொடா்ந்து விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். நடைபாதை ஓரமாக கரும்பு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

அண்ணா வணிக வளாக கடைக்காரா்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை விரிவாக்கம் செய்து வருகின்றனா். இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா். இவற்றை அகற்றினாலே கடை வீதியில் போக்குவரத்து பிரச்னை இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com