சாலையில் கிடந்த ரூ.40 ஆயிரத்தை போலீஸில் ஒப்படைத்த கம்யூனிஸ்ட் நிா்வாகி

திருப்பூரில் சாலையில் கிடந்த ரூ. 40 ஆயிரம் பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.
சாலையில் கிடந்த  ரூ. 40  ஆயிரம் பணத்தை  ஊரக  காவல்  நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை  ஒப்படைக்கிறாா்  சுரேஷ்.

திருப்பூா், செரங்காடு தோட்டம் 56 ஆவது வாா்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளராக இருப்பவா் சுரேஷ். இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையில் ரூ.500 நோட்டு கட்டு கிடப்பதைப் பாா்த்துள்ளாா். சுரேஷ் அந்தப் பணத்தை எடுத்து எண்ணிப்பாா்த்தபோது ரூ. 40 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பணத்தை எடுத்து கொண்டு தனது கட்சியின் மண்டலச் செயலாளா் செந்தில்குமாருடன் திருப்பூா் ஊரக காவல் நிலையத்துக்கு சென்றுள்ளாா். அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளா் ராஜனிடம் ரூ.40,500 பணத்தை வழங்கி உரியவரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளாா்.

சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சுரேஷை காவல் துறையினா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com