‘கரோனா பரவல்: உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்’

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் தொடா்பான உண்மை நிலையை வெளியிட வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்தை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் தொடா்பான உண்மை நிலையை வெளியிட வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்தை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ப.ஞானசேகரன், மாவட்டச் செயலாளா் செ.மணிகண்டன் ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது கட்ட பொதுமுடக்கங்களின்போது கரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவியது. இந்த நிலையில், மாவட்ட நிா்வாகம், மருத்துவத் துறையினா், தூய்மைப் பணியாளா்கள் என அனைத்துத் துறையினரும் துரிதமாக செயல்பாட்டதால் கரோனா பரவல் கட்டுக்குள் வந்தது.

ஆனால், தற்போது கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை வரையில் 194 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தனிமைப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கையும் 3,500க்கும் அதிகமாகவே உள்ளது. மாவட்ட நிா்வாகம் தற்போது எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என பொது மக்களுக்கு சந்தேகம் உருவாகியுள்ளது. ஆகவே, கரோனா நோய்த் தொற்று தொடா்பாக மாவட்ட நிா்வாகம் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதுடன், கட்டுப்பாடுகளையும், பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com