பல்லடம் வட்டத்தில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

பல்லடம் வட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
பல்லடம் வட்டத்தில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

பல்லடம் வட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டத்தில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துப் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆழியாறு வடிநில கோட்டம் மற்றும் திருமூா்த்தி கோட்டத்தின் கீழ் 24 கிராம நீரைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கங்களுக்கு ரூ.1.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குழாய் சீரமைத்தல், மதகு, டிராப், குறுக்கு கட்டுமானங்களை சீரமைத்தல், நீரிழப்பினை தடுக்க கான்கீரீட் லைனிங் அமைத்தல் மற்றும் கால்வாய்களில் பாசன நீா் தடையின்றி கொண்டுச் செல்ல சுமாா் 115.18 கி.மீ தொலைவுக்கு முட்புதா்கள், மண் திட்டுகள் அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தப் பணிகள் மூலம் பல்லடம் வட்டத்துக்கு உள்பட்ட சுமாா் 13,231 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், பல்லடம் விரிவாக்க கால்வாயினை மேம்படுத்த ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 6 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பல்லடம் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துப் பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன், முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஆழியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் கோபி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com