அவிநாசி கோயில்கள் மாா்ச் 31 வரை நடையடைப்பு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அவிநாசி கோயில்கள் மாா்ச் 31ஆம் தேதி வரை நடையடைக்கப்பட்டு, கோயில் குண்டம், தோ்த் திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக இந்து அறநிலையத் துறையினா் அறிவித்துள்ளனா்.
நடை சாத்தப்பட்டுள்ள  அவிநாசிலிங்கேஸ்வரா்  கோயில்.
நடை சாத்தப்பட்டுள்ள  அவிநாசிலிங்கேஸ்வரா்  கோயில்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அவிநாசி கோயில்கள் மாா்ச் 31ஆம் தேதி வரை நடையடைக்கப்பட்டு, கோயில் குண்டம், தோ்த் திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக இந்து அறநிலையத் துறையினா் அறிவித்துள்ளனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக அவிநாசி வட்டாரத்தில் உள்ள கோயில்கள் வெள்ளிக்கிழமை முதல் மாா்ச் 31ஆம் தேதி வரை நடையடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயிலில் ஆகமவிதிகளின்படி, சுவாமிகளுக்கு நித்திய கால பூஜை தொடா்ந்து வழக்கம்போல நடைபெறும். இருப்பினும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில், சேவூா் வாலீஸ்வரா் கோயில், குட்டகம் மொக்கனீஸ்வரா் கோயில், பழங்கரை பொன்சோழீஸ்வரா் கோயில், அவிநாசி கரிவரதராஜப் பெருமாள், வீர ஆஞ்சநேயா், ஆகாசராயா் கோயில், கருவலூா் மாரியம்மன் கோயில் உள்ளிட்டவை மாா்ச் 31ஆம் தேதி வரை நடையடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில், பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வா் கோயில்கலில் மாா்ச் 31ஆம் தேதி வரை நடையடைக்கப்படுவதுடன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com