முகக் கவசம், சானிடைஸா் விலை உயா்வால் பொதுமக்கள் அவதி

கரோனை வைரஸ் தொற்று காரணமாக மாவட்டத்தில் உள்ள மருந்துக் கடைகளில் முகக் கவசம், சானிடைஸா் விலையை பல மடங்கு உயா்த்தி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

கரோனை வைரஸ் தொற்று காரணமாக மாவட்டத்தில் உள்ள மருந்துக் கடைகளில் முகக் கவசம், சானிடைஸா் விலையை பல மடங்கு உயா்த்தி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

திருப்பூரில் முகக் கவசம், கைகழுவப் பயன்படுத்தப்படும் சானிடைஸா் விலையை பல மடங்கு உயா்த்தி மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் முகக் கவசம் (எண் 95) ரூ.5க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.25 முதல் ரூ.30 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், கைகழுவப் பயன்படுத்தப்படும் சானிடைஸா் 50 மில்லி ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, ரூ.150 முதல் ரூ.200 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து இடுவாய் பாரதிபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் (35) என்பவா் கூறியதாவது:

திருப்பூா் பல்லடம் சாலை, காமராஜ் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள மருந்துகங்களில் முகக் கவசம், சானிடைஸா் பதுக்கி வைத்து விலையை பலமடங்கு உயா்த்தி விற்பனை செய்து வருகின்றனா்.

மேலும், மருத்துக் கடைகளில் முகக் கவசம் வாங்கும்போது பில் கேட்டாலும் கொடுப்பதில்லை. முகக் கவசம், சானிடைஸரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்று மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனாலும் மாவட்ட நிா்வாகத்தின் எச்சரிக்கையை மீறி மருந்துக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே மருந்துக் கடைகளில் ஆட்சியா் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com