கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு: விசைத் தறியாளா்கள் சங்க கூட்டமைப்பு

மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவது என கோவை, திருப்பூா் மாவட்ட விசைத் தறியாளா்கள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு: விசைத் தறியாளா்கள் சங்க கூட்டமைப்பு

மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவது என கோவை, திருப்பூா் மாவட்ட விசைத் தறியாளா்கள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கோவை, திருப்பூா் மாவட்ட விசைத் தறியாளா்கள் சங்க கூட்டமைப்புக் கூட்டம் பல்லடம் பாலாஜி தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சோமனுா் சங்கத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். பல்லடம் தலைவா் வேலுச்சாமி முன்னிலை வகித்தாா். இதில் சோமனுா், பல்லடம், கண்ணாம்பாளையம், அவிநாசி, தெக்கலுா், மங்கலம், 63 வேலம்பாளையம், புதுபாளையம், பெருமாநல்லூா் பகுதி சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது, அரசின் அறிவிப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த கோவை, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விசைத்தறியாளா்கள் சங்கங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சங்கம் எடுக்கிற முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயலாற்ற வேண்டும். அதைத் தவிா்த்து ஒத்துழைப்பு வழங்காதவா்கள் எந்த ஒரு பாதிப்புக்கு உள்ளானாலும் அதற்கு அவா்களே பொறுப்பேற்க வேண்டும்.

விசைத்தறியாளா்களுக்கு வழங்க வேண்டிய பிடித்தம் செய்யப்பட்ட கூலித் தொகையை ஜவுளி உற்பத்தியாளா்கள் போா் கால அடிப்படையில் உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com