பிலிப்பின்ஸ் நாட்டில் இருந்து வந்த மாணவிக்கு கரோனா அறிகுறி இல்லை

பிலிப்பின்ஸ் நாட்டில் இருந்து முத்தூருக்கு வந்த, மருத்துவம் படிக்கும் மாணவிக்கு கரோனா அறிகுறி எதுவும் இல்லை என புதன்கிழமை நடந்த முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டில் இருந்து முத்தூருக்கு வந்த, மருத்துவம் படிக்கும் மாணவிக்கு கரோனா அறிகுறி எதுவும் இல்லை என புதன்கிழமை நடந்த முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், முத்தூா் பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த 19 வயது மாணவி, பிலிப்பின்ஸ் நாட்டில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறாா். அங்கு கல்லூரி விடுமுறை விடப்பட்டதால் விமானம் மூலம் மலேசியா வழியாக திருச்சி வந்து அங்கிருந்து கடந்த 12 ஆம் தேதி பேருந்தில் சொந்த ஊருக்கு வந்தாா்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்த மாணவி மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். பின்னா் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி, முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் பிரசாத், தாமரைக்கண்ணன், வினோதினி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் மாணவியைப் பரிசோதனை செய்தனா்.

இதில் அந்த மாணவிக்கு இருமல், சளி, காய்ச்சல் மற்றும் கரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் மாணவியின் ரத்த மாதிரி திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு மேல் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பு நலன் கருதி மாணவி மற்றும் அவரது குடும்பத்தினா் 14 நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவியின் வீடு இருக்கும் பகுதியில் சுகாதாரப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com