அபராதக் கட்டணமின்றி அஞ்சலக காப்பீட்டுத் தொகை செலுத்தலாம்

அஞ்சலக காப்பீடு திட்டங்களுக்கான பிரீமிய தொகையை அபராதக் கட்டணம் இல்லாமல் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூா்: அஞ்சலக காப்பீடு திட்டங்களுக்கான பிரீமிய தொகையை அபராதக் கட்டணம் இல்லாமல் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு திட்டத்தில் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரையும், ஊரக ஆயுள் காப்பீடு திட்டத்தில் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெறலாம்.

இந்தத் திட்டங்களுக்கான 7 ஆண்டு முதல், 25 ஆண்டு வரை பிரீமியம் தொகை அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். அஞ்சல் ஆயுள் காப்பீடு (பி.எல்.ஐ.,) திட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியா்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், செவிலியா் மட்டுமே சேர முடியும். ஊரக ஆயுள் காப்பீடு திட்டத்தில் (ஆா்.பி.எல்.ஐ.,) அனைத்து தரப்பினரும் சேரலாம் இத்திட்டத்தில் சோ்ந்த சந்தாதாரா்கள் 1, 3, 6, 12 மாத தவணைக் காலங்களாக பிரித்து பிரீமிய தொகை கட்டி வருகின்றனா்.

சில சந்தாதாரா்கள் பிரீமிய தொகையை செலுத்தாமல் உள்ளனா். இவா்களுக்கு மாா்ச் 31க்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது கரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், மக்கள் வெளியே வர முடியாத சூழலில் உள்ளனா். பெரும்பாலான ஏழை மக்களின் வாழ்வாதாரம் இதில் பாதிக்கப்பட்டுள்ளதால், பிரீமிய தொகை செலுத்துவதற்கான அவகாசத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும், வாடிக்கையாளா்கள் எந்தவித அபராத கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com