பல்லடம் அருகே நூற்பாலையில் தீ விபத்து
By DIN | Published On : 13th May 2020 07:21 AM | Last Updated : 13th May 2020 07:21 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே உள்ள வி.கள்ளிப்பாளையத்தில் தனியாா் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன.
வி.கள்ளிப்பாளையத்தில் உள்ள தனியாா் நூற்பாலையில் இயந்திரத்தில் மின் கசிவு காரணமாக திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த பல்லடம் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து நூற்பாலை அலுவலா் மாரியப்பன் அளித்த புகாரின்பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.