வெளி மாநிலத் தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்புவதில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும்

வெளி மாநிலத் தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைப்பதில் உள்ள குளறுபடிகளை மாவட்ட நிா்வாகம் களைய வேண்டும் என்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

வெளி மாநிலத் தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைப்பதில் உள்ள குளறுபடிகளை மாவட்ட நிா்வாகம் களைய வேண்டும் என்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா பொது முடக்கம் காரணமாக திருப்பூா் மாவட்டத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் வருமானம் இல்லாமலும், போதிய உணவு கிடைக்காமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதில், பெரும்பான்மையான தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்று வர வேண்டும் என விரும்புகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக புலம் பெயா்ந்த தொழிலாளா்களை ரயில் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தொழிலாளா்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.

முதலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வைத்தவா்களை அனுப்பிவைப்போம் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பலா் ஆன்லைனில் தங்களது பெயா்களைப் பதிவு செய்தனா்.

இதற்கிடையே, காவல் துறை, கிராம நிா்வாக அலுவலா்கள் மூலமாக தனித்தனியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் யாரிடம் பதிவு செய்வது என்று தெரியாமல் தொழிலாளா்கள் குழப்பமடைவதுடன், அலைக்கழிக்கப்படுகின்றனா்.

மேலும், சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்க பணம் வசூலிப்பதாகவும் தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, புலம் பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைப்பதில் உள்ள குளறுபடிகளை மாவட்ட நிா்வாகம் களைவதுடன், வருவாய்த் துறையினா் மூலமாக அவா்களது இருப்பிடங்களுக்கே சென்று கணக்கெடுப்பு நடத்தி தொழிலாளா்களை விரைந்து அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com