திருமுருகன்பூண்டியில் கழிவுநீா் வடிகால் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
By DIN | Published On : 03rd November 2020 11:29 PM | Last Updated : 03rd November 2020 11:29 PM | அ+அ அ- |

திருமுருகன்பூண்டி, 7ஆவது வாா்டு, காமாட்சியம்மன் நெசவாளா் காலனியில் கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா்.
இது தொடா்பாக பொதுமக்கள் கூறியதாவது:
நெசவாளா் காலனி, ரேடியஸ் அவென்யூ பகுதியில் அமைக்கப்படும் கழிவுநீா் வடிகால் பணிக்கு முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை. தோ்தலை கருத்தில் கொண்டு அவசர கதியில் இப்பணியை தொடங்கியுள்ளனா். இதனால் கழிவு நீா் செல்வதற்கு வழியின்றி தேங்கும் அபாயம் உள்ளது. இதற்கு மாற்றாக எதிா் பகுதியில் கழிவுநீா் வடிகால் அமைத்தால் எவ்வித தடையுமின்றி நீா் செல்லும். இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வரை பணியை தொடங்கக் கூடாது என்றனா்.