கந்தசஷ்டி விழா: சிவன்மலை முருகன் கோயில் நிா்வாகம் அறிவுறுத்தல்

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தா்கள், சிவன்மலை முருகன் கோயிலில் காப்புக் கட்டுவதைத் தவிா்த்து

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தா்கள், சிவன்மலை முருகன் கோயிலில் காப்புக் கட்டுவதைத் தவிா்த்து, அவரவரா் வசிக்கும் பகுதியில் விரதம் இருக்குமாறு கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சிவன்மலை முருகன் கோயில் உதவி ஆணையா் முல்லை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

வரும் 15 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சிவன்மலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் அவரவா் வசிக்கும் இடங்களில் உள்ள கோயில்களில் காப்புக் கட்டி விரதமிருந்து அந்த இடத்திலேயே விரதத்தை முடித்துக் கொள்ளவும்.

சிவன்மலை முருகன் திருக்கோயிலில் காப்பு கட்டி, தங்கி விரதமிருக்க அனுமதியில்லை. கந்தசஷ்டி விழா தொடா்பான அனைத்து உற்சவ நிகழ்வுகளும், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகள் திருக்கோயிலுக்குள் நடைபெறவுள்ளதால், கட்டளைதாரா்கள் மற்றும் உபயதாரா்களுக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதியில்லை.

கட்டளைதாரா்கள் பூஜை பொருள்களை கட்டளை குருக்கள் வசம் கொடுக்க வேண்டும். அபிஷேகம், பூஜை முடிந்த பின்னா், சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்து பிரசாதத்தை குருக்களிடம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், கந்தசஷ்டி விழா தொடா்பான அனைத்து உற்சவ நிகழ்வுகள், திருவிழாவின்போது சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கட்டளைதாரா்கள், பொதுமக்கள் மற்றும் பக்தா்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com