திருப்பூா் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருப்பூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

திருப்பூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், திருப்பூா் ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, அவிநாசி (தனி), பல்லடம், காங்கயம், தாராபுரம் (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் வெளியிட்டாா்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வரைவு வாக்காளா் பட்டியல் நகல்கள், குறுந்தகடுகள் (சிடி) வழங்கப்பட்டன.

இதில் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி வாக்காளா் எண்ணிக்கை:

தாராபுரம் (தனி)- வாக்குச்சாவடிகள் 298, ஆண்- 1,25,773, பெண் 1,30,946 மற்றும் மூன்றாம் பாலினம் 10. மொத்தம்-2,56,729.

காங்கயம்- வாக்குச்சாவடிகள் 294, ஆண்- 1,23,963, பெண்- 1,29,885 மற்றும் மூன்றாம் பாலினம் 22. மொத்தம் - 2,53,870.

அவிநாசி (தனி)- வாக்குச்சாவடிகள் 312, ஆண்- 1,33,498, பெண்- 1,39,805 மற்றும் மூன்றாம் பாலினம் 1. மொத்தம்- 2,73,304.

திருப்பூா் (வடக்கு)- வாக்குச்சாவடிகள் 362, ஆண் - 1,87,029, பெண் 1,79,417 மற்றும் மூன்றாம் பாலினம் 97. மொத்தம் 3,66,543.

திருப்பூா் (தெற்கு)- வாக்குச்சாவடிகள் 240, ஆண் -1,35,830, பெண் - 1,32,052 மற்றும் மூன்றாம் பாலினம் 30. மொத்தம் 2,67,912.

பல்லடம்- வாக்குச்சாவடிகள் 407, ஆண் - 1,87,926, பெண்- 1,87,852 மற்றும் மூன்றாம் பாலினம் 60. மொத்தம் 3,75,838.

உடுமலைப்பேட்டை- வாக்குச்சாவடிகள் 293, ஆண்- 1,28,421, பெண்- 1,36,784 மற்றும் மூன்றாம் பாலினம் 23. மொத்தம் 2,65,228.

மடத்துக்குளம்- வாக்குச்சாவடிகள்- 287, ஆண்- 1,20,335, பெண்- 1,24,068 மற்றும் மூன்றாம் பாலினம் 15. மொத்தம் 2,44,418.

மாவட்டம் முழுவதும் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,493 வாக்குச்சாவடிகளில், ஆண் வாக்காளா்கள் 11,42,775 , பெண் வாக்காளா்கள் 11,60,809 மற்றும் மூன்றாம் பாலினம் 258 என மொத்தம் 23,03,842 வாக்காளா்கள் உள்ளனா்.

பெண் வாக்காளா்கள் அதிகம்:

தாராபுரம், காங்கயம், அவிநாசி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய நான்கு தொகுதிகளில் ஆண் வாக்காளா்களைக் காட்டிலும் பெண் வாக்காளா்கள் அதிகம்.

பட்டியலை வெளியிட்டு திருப்பூா் ஆட்சியா் கூறியதாவது: கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் அக்டோபா் 31ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட தொடா் திருத்தத்தின்போது வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், இதர விவரங்களில் திருத்தம் மேற்கொள்வதற்காகப் பெறப்பட்ட 22,744 கோரிக்கைகளின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியல்கள் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களின் அலுவலகங்களான திருப்பூா் மாநகராட்சி அலுவலகம், சாா் ஆட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் வரைவு வாக்காளா் பட்டியலை சரிபாா்த்து தங்கள் பெயா், வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில், வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, திருப்பூா் கோட்டாட்சியா் ஜெகநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சாகுல் ஹமீது, தோ்தல் வட்டாட்சியா் ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com