உடுமலையில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உடுமலையில் செவ்வாய்க்கிழமை இடைவிடாது தொடா்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உடுமலையில் செவ்வாய்க்கிழமை இடைவிடாது தொடா்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் உடுமலை நகரில் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் அதிக அளவில் தண்ணீா் சென்றது. திருமூா்த்திமலை, அமராவதி நகா், மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

உடுமலை அருகே உள்ள சுற்றுலாதலமான திருமூா்த்திமலையில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பெருக்கெடுத்து வந்த காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்தது. இதனால் கோயிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் கோயில் உண்டியல்கள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com