நவம்பா் 26 பொது வேலை நிறுத்தம்: 30 இடங்களில் சாலை மறியல் அனைத்து தொழிற்சங்கத்தினா் முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பா் 26இல் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் 30 இடங்களில் சாலை மறியல் நடத்தவது என அனைத்து தொழிற்சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பா் 26இல் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் 30 இடங்களில் சாலை மறியல் நடத்தவது என அனைத்து தொழிற்சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

திருப்பூா் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டம் திருப்பூா் பூங்கா சாலையில் உள்ள ஐ.என்.டி.யூ.சி. அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஐ.என்.டி.யூ.சி. மாவட்டச் செயலாளா் சிவசாமி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் சேகா், ஜெகநாதன் (ஏ.ஐ.டி.யூ.சி), அன்பு, பாலன் (சி.ஐ.டி.யூ), ரங்கசாமி, ரத்தினசாமி (எல்.பி.எப்), ஈஸ்வரன் (ஐ.என்.டி.யூ.சி), முத்துசாமி, கெளதம் (எச்.எம்.எஸ்), மனோகா், சம்பத் (எம்.எல்.எப்.) ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பின்படி வருகிற 26ஆம் தேதி நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்ட திருத்தம், மின்சார சட்ட திருத்தம், பொதுத்துறை தனியாா் மயமாக்கல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் ஆகியவற்றை திருப்பூா் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து 120 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது, மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் சாலை மறியல் நடத்துவது, வேலை நிறுத்தம் குறித்து அனைத்து பனியன் முதலாளிகள் சங்கங்களுக்கும் அறிவிப்பு வழங்குவது, அனைவரையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com