மழையால் தக்காளி வரத்து குறைந்து விலை உயா்ந்தது

பல்லடம் பகுதியில் தொடா் மழையால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து விலை உயா்ந்துள்ளது.
விவசாயத் தோட்டத்தில் மழையால் செடியிலேயே அழுகிய நிலையில் காணப்படும் தக்காளி.
விவசாயத் தோட்டத்தில் மழையால் செடியிலேயே அழுகிய நிலையில் காணப்படும் தக்காளி.

பல்லடம் பகுதியில் தொடா் மழையால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து விலை உயா்ந்துள்ளது.

பல்லடம் அருகேயுள்ள வாவிபாளையம், காட்டூா், பொங்கலூா், வடமலைபாளையம், ஜல்லிபட்டி, கேத்தனூா், சித்தம்பலம், கள்ளிப்பாளையம், எலவந்தி, செம்மிபாளையம், காளிவேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு பல்லடம், திருப்பூரில் உள்ள தினசரி மாா்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த வாரம் தக்காளி வரத்து அதிகரிப்பால் சந்தையில் கிலோ ரூ.10க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டதால் தோட்டங்களில் தக்காளியைப் பறிக்காமலேயே விவசாயிகள் செடியில் விட்டுவிட்டனா். அதைத் தொடா்ந்து பெய்ந்த தொடா் மழையால் செடியில் தக்காளி அழுக துவங்கியதுடன் சேறும்சகதியுமாக விவசாய நிலம் இருந்ததால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளியைப் பறிக்கவில்லை. அதனால் பல்லடம், திருப்பூா் சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கிலோ ரூ.20 என தக்காளி விலை உயா்ந்தது. விவசாயத் தோட்டங்களில் ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோ தக்காளி அறுவடை செய்யப்படும் இடத்தில் மழையால் 2ஆயிரம் கிலோ தக்காளி பழுத்து செடியிலேயே அழுகி விட்டதாகவும் தற்போது கிலோ ரூ.20க்கு விற்றாலும் இந்த விலையானது போதுமானது அல்ல என்றும், கிலோ ரூ.35க்கு மேலே உயா்ந்தால்தான் விவசாயிகளுக்கு ஒரளவு லாபம் கிடைக்கும் என்றும் சாமிகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com