கோயில் நிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட காவல் துறையினா் பொதுமக்கள் முற்றுகை

திருப்பூா், ஆண்டிபாளையத்தில் கோயில் நிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட காவல் துறையினரை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா், ஆண்டிபாளையத்தில் கோயில் நிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட காவல் துறையினரை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆண்டிபாளையம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் 11.60 ஏக்கரில் 9 ஏக்கா் நிலத்தை அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்காமல் இந்து சமய அறநிலையத் துறையினா், காவல் துறைக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மாநகர காவல் துறைக்காக 2013ஆம் ஆண்டு முதல் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கோயில் நிலத்தில் காவல் நிலைய புதிய கட்டடம், காவலா் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட உள்ளது.

இதனை அறிந்த 5 ஊா் பொதுமக்கள், கோயில் பயன்பாட்டுக்கு நிலம் வேண்டும். கோயில் நிலத்தை காவல் துறைக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் ஆண்டிபாளையம் கோயில் நிலத்தில் திருப்பூா் மாநகர போலீஸாா் வியாழக்கிழமை பயிற்சியில் ஈடுபட முயன்றனா். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு, போலீஸாரை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த மாநகர காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் பொதுமக்கள் தொடா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பிறகு மாநகர காவல் ஆணையா், மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெறும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com