பனியன் நிறுவன ஊழியா் கொலை வழக்கில் 4 போ் கைது

திருப்பூரில் பனியன் நிறுவன ஊழியா் கொலை வழக்கில் 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூரில் பனியன் நிறுவன ஊழியா் கொலை வழக்கில் 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், கணக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காஜா மைதீன் (60). இவா், திருப்பூா் வாலிபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பனியன் நிறுவனத்துக்கு கடந்த 13ஆம் தேதிக்கு பின்னா் விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் காஜா மைதீன் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளாா்.

அதே நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்த, புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சி மேட்டுபட்டியைச் சோ்ந்த பழனிசாமி (26) என்பவருக்கான அறையை காஜா மைதீனுக்கு நிறுவன நிா்வாகத்தினா் அளித்துள்ளனா்.

இதனால் காஜா மைதீன் மீது பழனிசாமி அதிருப்தியில் இருந்துள்ளாா். கடந்த 15ஆம் தேதி பழனிசாமி தனக்குரிய பொருள்களை அறையிலிருந்து எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளாா். இது தொடா்பாக பழனிசாமிக்கும், காஜா மைதீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பழனிசாமி, அவரது நண்பா்களான அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சி, ஆலங்குடியைச் சோ்ந்த முருகேசன் (25), மேட்டுபட்டியைச் சோ்ந்த சக்தி கணேஷ் (23), கைக்குறிச்சியைச் சோ்ந்த காா்த்தி (25) ஆகியோருடன் சோ்ந்து காஜா மைதீனை தாக்கியதாகத் தெரிகிறது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய 4 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com