பொறுப்பேற்பு

அதிமுக திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அதிமுக திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருப்பூா் - காங்கயம் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக திருப்பூா் வளா்மதி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆா்., சிலைக்கும், ஜெயலலிதா உருவப் படத்துக்கும் அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் மக்களவை உறுப்பினருமான சி.சிவசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் சு.குணசேகரன் (திருப்பூா் தெற்கு), கே.என்.விஜயகுமாா் (திருப்பூா் வடக்கு), முன்னாள் மண்டல தலைவா்கள் ஜெ.ஆா்.ஜான், ராதாகிருஷ்ணன், மாணவரணி செயலாளா் அன்பகம் திருப்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புகா் கிழக்கு மாவட்டச் செயலாளா்: அதிமுக திருப்பூா் புகா் கிழக்கு மாவட்டச் செயலாளராக சி.மகேந்திரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

முன்னதாக மடத்துக்குளம், தண்ணீா் பந்தல், நான்கு சாலை பகுதியில் சி.மகேந்திரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அங்கிருந்து ஊா்வலமாக பதவியேற்பு விழா நடைபெறும் மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் கே.ஆறுச்சாமி, ஆா்.ஜி.ஜெகநாதன், மெட்ராத்தி நா.அண்ணாத்துரை, கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com