டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு

திருப்பூா், முருகம்பாளையத்தில் கோயில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

திருப்பூா், முருகம்பாளையத்தில் கோயில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து முருகம்பாளையம், இடுவம்பாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா், முருகம்பாளையம் ஊரின் மையப் பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே அந்தப் பகுதிகளில் ஏராளமான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது புதிதாக டாஸ்மாக் கடை அமைய உள்ள இடம் அருகே கோயில்களும், பள்ளிகளும் உள்ளன. இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் மாணவ, மாணவிகள் மற்றும் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே, முருகம்பாளையத்தில் புதிதாக அமைக்க உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் சாா்பில் மனு:

திருப்பூரைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளாக வாழ்ந்து வருகிறோம். மேலும், எங்களது குடும்பமும் மிகவும் வறுமையில் இருந்து வருகிறது. நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் வாடகை கொடுப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனவே எங்களுக்கு கருணை அடிப்படையில் பழவஞ்சிபாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கித்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com