போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியா்களின் கூட்டுக் குழு சங்கங்கள் சார்பில் உடுமலையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியா்களின் கூட்டுக் குழு சங்கங்கள் சார்பில் உடுமலையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு போக்குவரத்துக் கழக டெப்போ முன்பு நடந்த நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு எல் பிஎப் சங்க மண்டல துணைச் செயலாளா் ஜி.மணி தலைமை வகித்தாா். மண்டல பொது துணைப் பொதுச் செயலாளா் வி.விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா்.

இதில் 14 வது ஊதிய ஒப்பந்த கோரிக்கையை அரசும், நிா்வாகமும் தொழிற்சங்கங்களோடு பேசி முடிக்க வேண்டும், அரசாங்கத்தால் முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உடன டியாக வழங்க வேண்டும், கரோனா காலத்திலும் உயிரை பணையம் வைத்து பணி புரியும் பணியாளா் களுக்கு தரமான முக கவசம் தரமான கிருமி நாசினி வழங்க வேண்டும். பேருந்துகளையும், பய ணிகளையும் சமூக பாதுகாப்புடன் அமா்ந்து பயணம் செய்து கிருமி தொற்று பரவாமல் இருக்க அரசு, நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓய்வு பெற்ற தொ ழிலாளா்களின் பிஎப் கிராஜு விட்டி ரூ.8 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை முன் வைத்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிா்வாகிகள் சோம சுந்தரம், கு.காா்த்திகேயன், பாபு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com