வேளாண் துறையினா் களப் பணி ஆய்வு

காங்கயம் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகைமை திட்டத்தின் கீழ் விஞ்ஞானிகள் மற்றும் களப் பணியாளா்கள் இணைந்து அண்மையில் களப்பணி ஆய்வு மேற்கொண்டனா்.

காங்கயம் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகைமை திட்டத்தின் கீழ் விஞ்ஞானிகள் மற்றும் களப் பணியாளா்கள் இணைந்து அண்மையில் களப்பணி ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், பொங்கலூா் வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து பி.ஜி.கவிதா, வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) காங்கயம் பானுப்பிரியா, உதவி வேளாண்மை அலுவலா் கல்யாணராஜன், அட்மா திட்ட அலுவலா்கள் பூங்கொடி, வசந்தமுருகன் ஆகியோா் இணைந்து காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலாம்பாடி, திட்டுப்பாறை, வீரணம்பாளையம் கிராமங்களில் தென்னந்தோப்புகளை ஆய்வு செய்தனா்.

அப்போது தென்னையில் அதிக மகசூலை பெற உர மேலாண்மை, நீா் மேலாண்மை, பயிா் மேலாண்மை ஆகியவற்றை சரியான முறையில் செய்ய வேண்டும். நீா் மேலாண்மையை பொருத்த வரை ஒரு மரத்துக்கு தினமும் 50 முதல் 60 லிட்டா் தண்ணீா் பாய்ச்சுவதன் மூலம் நல்ல மகசூலை பெற முடியும்.

மேலும், தழைச்சத்து, சாம்பல்சத்து, மணிச்சத்து நிறைந்த உரங்கள், தென்னை நுண்ணூட்ட கலவையை 6 மாதங்களுக்கு ஒரு முறை இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை மேம்படுத்தி, காய்ப் பிடிப்பை அதிகரிக்க முடியும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் தயாரித்து வழங்கப்படும் தென்னை டானிக்-ஐ ஒரு மரத்துக்கு 40 மி.லி. என்ற அளவில் 160 மி.லி. தண்ணீரில் கலந்து வோ் மூலம் கொடுப்பதன் மூலம் சத்துப் பற்றாக்குறை மற்றும் பூச்சிநோய் தாக்குதலில் இருந்து மரங்களைப் பாதுகாக்க முடியும் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com