முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
வீடுகளில் வேலை செய்யும் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம்
By DIN | Published On : 04th October 2020 11:15 PM | Last Updated : 04th October 2020 11:15 PM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் வீடுகளில் வேலை செய்யும் தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாக தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசின் தொழிலாளா் துறையில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு 17 தொழிலாளா் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், உடலுழைப்பு தொழிலாளா்கள், ஓட்டுநா் உள்பட பல்வேறு அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா். நலவாரியங்களில் உறுப்பினா்களாக உள்ள தொழிலாளா்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தகுதி அடிப்படையில் வழங்கப்படுகிறது.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்கள் அனைவரும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நலவாரியத்தில் உறுப்பினா்களாகத் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். நலவாரியப் பதிவுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலம் சமா்ப்பித்த பிறகு தொழிலாளா்களின் செல்லிடப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாக அதுகுறித்த தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.