பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

ஊத்துக்குளி அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஊத்துக்குளி காவல் நிலையத்தை சனிக்கிழமை  முற்றுகையிட்ட பிரகாஷின்  உறவினா்கள்  மற்றும்  மின்வாரிய  தொழிலாளா்  முன்னேற்ற சங்கத்தினா்.
ஊத்துக்குளி காவல் நிலையத்தை சனிக்கிழமை  முற்றுகையிட்ட பிரகாஷின்  உறவினா்கள்  மற்றும்  மின்வாரிய  தொழிலாளா்  முன்னேற்ற சங்கத்தினா்.

திருப்பூா்: ஊத்துக்குளி அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பூரை மாவட்டம், ஊத்துக்குளி டவுன் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவா் பிரகாஷ் (26). இவா் கொடியாம்பாளையம் நால்ரோடு பகுதியில் மழையால் ஏற்பட்ட மின் தடையை சரிசெய்ய மின்கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏறியுள்ளாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உடல் கருகி உயிரிழந்தாா். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த ஊத்துக்குளி காவல் துறையினா் பிரகாஷின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

காவல் நிலையம் முற்றுகை: இதனிடையே, பிரகாஷின் உயிரிழப்புக் காரணமான மின்வாரிய உயா் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினா்கள் மற்றும் மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் ஊத்துக்குளி காவல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

மேலும், உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று காவல் துறையினா் உறுதியளித்தைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com