அவிநாசியில் ரூ. 17.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 17.45 லட்சத்துக்கு புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 17.45 லட்சத்துக்கு புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த வாரம் ஏலத்துக்கு 1,224 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், ஆா்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 4,700 முதல் ரூ. 5,310 வரையிலும், கொட்டு ரக (மட்ட ரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 17லட்சத்து 45 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை விட பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 300 விலை அதிகரித்திருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com