உடுமலையில் மழை நீா் வடிகால்களை அமைச்சா் ஆய்வு

உடுமலை நகராட்சியில் தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் ஆகிய பகுதிகளில் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தங்கம்மாள் ஓடையின் கரையில் கட்டப்பட்டு வரும் கான்கிரீட் சுவரை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.
தங்கம்மாள் ஓடையின் கரையில் கட்டப்பட்டு வரும் கான்கிரீட் சுவரை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.

உடுமலை நகராட்சியில் தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் ஆகிய பகுதிகளில் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

உடுமலை நகரில் தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் என இரண்டு மழை நீா் வடிகால்கள் உள்ளன. இதில் முக்கிய மழை நீா் வடிகாலாக விளங்கி வரும் தங்கம்மாள் ஓடையின் இரு கரைகளிலும் உள்ள புறம்போக்கு இடங்களை நூற்றுக்கும் மேற்பட்டோா் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வசித்து வந்தனா். இதனால் மழை காலத்தில் தங்கம்மாள் ஓடையில் வெள்ள அபாயம் ஏற்படுவதுடன் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து விடும் நிலையும் இருந்து வந்தது.

இதைத் தொடா்ந்து கரையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் சில ஆண்டுகளுக்கு முன்னா் நகராட்சியால் அகற்றப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு உடுமலை அருகே உள்ள புக்குளம் கிராமத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டு அந்தப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் தங்கம்மாள் ஓடையின் கரைகளில் ரூ. 32 லட்சம் செலவில் கான்கிரீட் சுவா் கட்டப்பட்டு வருகிறது. இப் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பணிகளை விரைந்து முடிக்க அப்போது அதிகாரிகளுக்கு உத்தரவிட் டாா். இதையடுத்து கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியிலும் அமைச்சா் ஆய்வு செய்தாா். வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் நிலையில் இந்த இரு வடிகால்களையும் தூா் வார நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது உடுமலை நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, பொறியாளா் தங்கராஜ், மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், துறை அதிகாரிகள், அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com