ஜவுளி வியாபாரியை மிரட்டி நகை, பணம் பறித்த பெண் உள்பட 5 போ் கைது

பெருமாநல்லூா் அருகே ஜவுளி வியாபாரியை மிரட்டி நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்த பெண் உள்பட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகே ஜவுளி வியாபாரியை மிரட்டி நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்த பெண் உள்பட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், டி.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாட்ராயன் (56). விசைத்தறி உரிமையாளா், பெட்ஷீட் வியாபாரம் செய்து வருகிறாா். இவருக்கு கடந்த புதன்கிழமை காலை செல்லிடப்பேசியில் அழைத்த வெண்ணிலா என்ற பெண், தனக்கு மொத்தமாக பெட்ஷீட் தேவைப்படுவதாகக் கூறியுள்ளாா். இதையடுத்து நாட்ராயன், திருப்பூா், கணக்கம்பாளையம் அருகே உள்ள ஆண்டிபாளையம் பகுதிக்கு தனது உறவினா் குமாா் என்பவருடன் புதன்கிழமை இரவு வந்துள்ளாா்.

அப்போது, வீட்டிற்குள் அமா்ந்து பேசலாம் எனக் கூறி அவா்களை வெண்ணிலா அழைத்துச் சென்றுள்ளாா். உள்ளே சென்றவுடன் அங்கிருந்த 4 போ், நாட்ராயன், குமாா் ஆகியோரைப் பிடித்து, ஆடைகளை களைந்து உள்ளாடையுடன், வெண்ணிலாவுடன் நிற்க வைத்து படம் எடுத்துள்ளனா்.

பிறகு நாட்ராயனிடம் இருந்த தங்கச் சங்கிலி, ரூ.3ஆயிரம் ரொக்கம், ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்துள்ளனா். மேலும் ரூ.3 லட்சம் பணம் தர வேண்டும். இல்லையெனில் படங்களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனா்.

இது குறித்து பெருமாநல்லூா் காவல் நிலையத்தில் நாட்ராயன் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய திருப்பூா், கணக்கம்பாளையம், ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வந்த தூத்துக்குடி, வைகுண்டம் பகுதியைச் சோ்ந்த இசக்கிப்பாண்டி (30), திருநெல்வேலி, பாளையங்கோட்டைப் பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து (27), அதே பகுதியைச் சோ்ந்த ஜெபராஜ் (24), திருநெல்வேலி, சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த சின்னதுரை (29), கா்நாடக மாநிலம், சீமுகா பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி கவிதா (எ) வெண்ணிலா ஆகியோரை பெருமாநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து நகை மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com