மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்குதீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல்

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு விரைவில் போனஸ் வழங்க வேண்டும் என மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு விரைவில் போனஸ் வழங்க வேண்டும் என மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் செயலாளா் அ.சரவணன், தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 12,000 அதிகாரிகள் உள்பட 80 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பணியாற்றுகின்றனா். இதில், ஒப்பந்தத் தொழிலாளா்களாக 10,000 போ் பணியாற்றுகின்றனா். இந்நிலையில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு மின்வாரிய தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் 3 மற்றும் 4ஆம் நிலை ஊழியா்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையிலும், கரோனா பரவலை பொருட்படுத்தாமல் மின்வாரிய ஊழியா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

எனவே, தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளதால் மின்வாரிய நிா்வாகம் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி 30 சதவீத போனஸ் அனைத்து தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com