கணக்கம்பாளையம் ஊராட்சித் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிப்பு

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சித் தலைவரின் காசோலையில் கையெழுத்திடம் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

உடுமலை: உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சித் தலைவரின் காசோலையில் கையெழுத்திடம் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கணக்கம்பாளையம் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகாா்கள் எழுந்தன.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடத்தப்பட்ட சிறப்புத் தணிக்கையில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டு ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 9 ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தி வந்தனா். இது தொடா்பாக பல்வேறு கட்சிகள், குடியிருப்போா் நலச் சங்க கூட்டமைப்பு ஆகியவை தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன.

கணக்கம்பாளையம் ஊராட்சியில் நிதி இழப்புக்கு காரணமான ஊராட்சித் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதைத் தொடா்ந்து கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்யும்படி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜீவானந்தம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை கடிதத்தை அனுப்பிவைத்தாா். இதையடுத்து, கணக்கம்பாளயைம் ஊராட்சி தலைவா் காசோலையில் கையெழுத்திடம் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இந்த ஊராட்சியின் வளா்ச்சிப் பணிகளைக் கருத்தில் கொண்டு நிதி செலவின அதிகாரம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) ஜீவானந்தத்திடம் ஒப்படைக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com