உடுமலை தொகுதியில் ரூ. 300 கோடிக்கு வளா்ச்சிப் பணிகள்:அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ. 300 கோடிக்கும் மேல் வளா்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்றுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.
உடுமலை ஏரிப்பாளையத்தில் நடைபெற்ற முகாமில் மூதாட்டியிடம் இருந்து கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொள்கிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.
உடுமலை ஏரிப்பாளையத்தில் நடைபெற்ற முகாமில் மூதாட்டியிடம் இருந்து கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொள்கிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.

உடுமலை: உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ. 300 கோடிக்கும் மேல் வளா்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்றுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

உடுமலை நகரில் உள்ள ஏரிப்பாளையம், சத்திரம் வீதி, காவல் நிலையம் அருகில் என மூன்று இடங்களில் பொதுமக்கள் சிறப்பு குறைதீா்க்கும் முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இதற்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ. 300 கோடிக்கும் மேல் வளா்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்றுள்ளன. உடுமலை நகராட்சி பகுதிகளில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் சிறப்பு நிதி பெற்று வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடுமலை தொகுதியில் கால்நடை மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை, விலையில்லா வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. கோரிக்கை மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளிடம் அமைச்சா் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டாா்.

உடுமலை கோட்டாட்சியா் க.ரவிக்குமாா், நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி, பொறியாளா் தங்கராஜ், மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com