”சட்டப் பேரவைத் தோ்தலில் ஆன்மிக அரசியலை முன்னெடுத்துச் செல்வோம்”

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆன்மிக அரசியலை முன்னெடுத்துச் செல்வோம் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆன்மிக அரசியலை முன்னெடுத்துச் செல்வோம் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா், வெங்கமேட்டில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அக்கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அா்ஜுன் சம்பத், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 2021 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அனைத்துத் தொகுதிகளிலும் ஆன்மிக அரசியலை வலுப்படுத்தக்கூடிய தோ்தல் செயல்பாடுகளை இந்து மக்கள் கட்சி தொடங்கி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுகவின் அவதூறு பிரசாரத்துக்கு பணிந்து சிறப்பு அந்தஸ்து வேண்டியதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். இதில், தமிழக முதல்வா் தலையிட்டு, மறு பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.

திராவிட கட்சிகளின் தவறான கொள்கைகளால் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் இல்லாமல் உள்ளது. நடிகா் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்காக காத்திருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com