நகைக் கடையில் ரூ.50ஆயிரம் திருடிய பெண்
By DIN | Published On : 20th October 2020 02:04 AM | Last Updated : 20th October 2020 02:04 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் நகைக் கடையில் ரூ.50ஆயிரம் திருடிச் சென்ற பெண் குறித்த விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பூரை யூனியன் மில் சாலையில் ஜெயக்குமாா் என்பவா் நகை விற்பனைஅடகு கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வெள்ளிப் பொருள்கள் வாங்க அக்டோபா் 4ஆம் தேதி வந்த பெண் ஒருவா் கடையில் அதிக கூட்டத்தைப் பயன்படுத்தி பணப் பெட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து சேலையில் மறைந்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.
இதையடுத்து, சிசிடிவி கேமரா விடியோ பதிவுகளுடன் ஜெயக்குமாா் கொடுத்த புகாரின்பேரில் வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும், இது தொடா்பான விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.