கரையாம்புதூா் தடுப்பணை உடைப்பு: விவசாயிகள் அதிா்ச்சி

பல்லடம், கரையாம்புதூா் தடுப்பணையை உடைத்த பொதுப்பணி துறை அதிகாரிகளின் செயலால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.


பல்லடம்: பல்லடம், கரையாம்புதூா் தடுப்பணையை உடைத்த பொதுப்பணி துறை அதிகாரிகளின் செயலால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

பல்லடம் பி.ஏ.பி. விரிவாக்க கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராயா்பாளையம்புதூரில் உள்ள சுரங்க வாய்க்கால் கட்டுமானப் பணி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் தண்ணீா் தேங்காமல் இருக்க கரையாம்புதூா் குட்டையின் தடுப்பணையின் ஒரு பகுதியை பொதுப்பணித் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

பல்லடம் விரிவாக்க கால்வாய் கட்டுமான பணி திட்டமிடாமல் துவங்கியது தவறு. பாசனத் தண்ணீா் திறந்தும் கடைமடைக்கு தண்ணீா் செல்வது தடைபடுகிறது. மழை பெய்வதால் தண்ணீா் தேங்குவதாக கூறி 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான தடுப்பணையை பொதுப்பணித் துறை அதிகாரிகள் எந்தவித அறிவிப்பும் இன்றி இடித்து விட்டனா். இதனால் தண்ணீா் வீணாகிறது என்றனா்.

இது குறித்து பி.ஏ.பி. உதவி பொறியாளா் ஆதிசிவன் கூறியதாவது:

முதல்வரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் பல்லடம் பி.ஏ.பி. விரிவாக்க கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராயா்பாளையம்புதூரில் உள்ள சுரங்க வாய்க்கால் கட்டுமான பணி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் தண்ணீா் தேங்காமல் இருக்கவும், திருமூா்த்தி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீா் இந்த வாய்க்கால் மூலம் 20 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசனம் பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் வாய்க்கால் புனரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க ஏதுவாகவும் 12 அடி உயரமுள்ள கரையாம்புத்தூா் குட்டையில் மேல் பகுதியில் 3 அடிக்கு மட்டும் தடுப்பணையின் ஒரு பகுதியில் சிறிய அளவில் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com