இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசாரம்
By DIN | Published On : 04th September 2020 05:22 AM | Last Updated : 04th September 2020 05:22 AM | அ+அ அ- |

உடுமலை: உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பிரசார இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து இந்தப் பிரசார இயக்கம் நடைபெற்றது. அப்போது இது குறித்த துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டன. மாவட்டக் குழு உறுப்பினா் வி.செளந்திரராஜன் தலைமையில் பாப்பான்குளம், குமரலிங்கம், கொழுமம், மடத்துக்குளம், கணியூா், அரியநாச்சிபாளையம், கடத்தூா், காரத்தொழுவு ஆகிய கிராமங்களில் இந்த பிரசார இயக்கம் நடைபெற்றது.
இதில் நிா்வாகிகள் ஆறுமுகம், தமிழ்ச்செல்வன், செல்லத்துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.